2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அஞ்சலிக் கூட்டம்

Menaka Mookandi   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் திருக்கோணமலையில் காலமான இறைபணிச் செம்மல் காந்தியச்சுடர் காந்தி ஐயாவுக்கான அஞ்சலிக் கூட்டம் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு, இல 774, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில், சங்கத்தின் தலைவர் ந.சிவகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

அஞ்சலி உரைகளை, ஓய்வுநிலை கமத்தொழில் சேவை பெரும்பாக உத்தியோகத்தர் வை.பாலகிருஷ்ணன், காந்தி நிலைய துணைச்செயலாளர் செ.சுப்பிரமணியம், பண்டிதர் வீ.ஏ.தங்கமயில் அகில இலங்கை காந்தி சேவா சங்க பொது செயலாளர் எம்.ஷாந்தன் சத்தியமூர்த்தி ஆகியோர் ஆற்றுவர்.

காந்தி வாத்தியார் நினைவாக “காந்தியம் சிறப்பிதழும்” இந்நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப்படும். காந்தி ஐயாவின் அபிமானிகளும் பொதுமக்களும், இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X