2025 மே 02, வெள்ளிக்கிழமை

அதிகரித்துள்ள இணைய மோசடி

Mithuna   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

இணைய  மோசடியில்  சிக்கி  யாழில்  மேலும்  இருவர்  26  இலட்ச   ரூபாய் பணத்தினை  இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு  செய்துள்ளனர். 

இணையம்  ஊடாக  அதிக  பணம்  ஈட்ட  முடியும்  என  ஆசை  வார்த்தைகளுடனான  விளம்பரங்களை  சமூக  வலைத்தளங்கள்  ஊடாக  மோசடிக்காரர்கள் செய்கின்றனர்.  அதனை  நம்பி  அந்த  இணைப்பின்  ஊடாக  உட்செல்வோர் பணத்தினை  இழந்து  வருகின்றனர். 

குறித்த  மோசடியினால்  கடந்த  வாரம்  யாழ்ப்பாணம்  மற்றும்  கோப்பாய்  பொலிஸ் பிரிவை  சேர்ந்த  இருவர் 30  இலட்சம்  மற்றும்  16  இலட்ச  ரூபாயை  இழந்த நிலையில்  பொலிஸ்  நிலையங்களில்  முறைப்பாடு  செய்துள்ளனர்.

இந்நிலையில் , புதன்கிழமை  (27)  ஒருவர்  20 இலட்ச  ரூபாயை  இழந்துள்ளதாகவும்,  மற்றையவர்  06  இலட்ச  ரூபாயை  இழந்துள்ளதாகவும்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளனர்.

இவ்வாறான  இணைய  மோசடியாளர்களிடம்  சிக்காது  மக்கள்  தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .