2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அத்துமீறும் சிங்கள மீனவர்களால் தொழில் பாதிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள், தாம் தினமும் சிங்கள மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையால் பாதிப்படைந்து வருவதாக  கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த குளத்தின் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி  வரும் இப்பகுதி மீனவர்கள் இந்த குளத்தில் முறையாக சட்ட வரம்புக்குட்பட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், யுத்தத்துக்கு பின்னரான சூழலில்  பராக்கிரமபுர, ஜெனகபுர கிராம சிங்கள மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோதமான தொழில் நடவடிக்கையால் தொழிலில் நட்டமடைந்துவருவதாகவும் தமது  மீன்பிடி உபகரணங்களையும் வலைகளையும் சிங்கள மீனவர்கள் சூறையாடி செல்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் .

இந்த சிங்கள மீனவர்களின் நடவடிக்கைக்கு  குளத்தின்  அருகில் உள்ள இராணுவமுகாம் இராணுவத்தினரும் துணை போவதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

இந்த குளம் தொடர்பான வழக்கு, இந்த குளத்தில் தற்போது மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிசங்கத்துக்கும் இக்குளத்தில்  சட்டவிரோத தொழிலில் ஈடுபடும்  சிங்கள மீனவர்களுக்கும் இடையில் நடைபெற்று, குளத்தின் உரிமம் தண்ணிமுறிப்பு மீனவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடி உரிமம் மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X