2025 ஜூலை 19, சனிக்கிழமை

அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 11 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், செட்டித்தெரு தெடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திருமதி சாந்தினி மாணிக்கத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து பெற்றோர்களால், இன்று திங்கட்கிழமை(11) ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண கல்வி அமைச்சால் வழமையாக வழங்கப்படும் அதிபர் இடமாற்றத்தின் அடிப்படையில் இவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் செட்டித்தெரு தெடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபராக இவர் கடமையேற்ற பின்னர் பாடசாலை வளர்ச்சியடைந்து வந்ததாகவும், இதனால் அவரை தொடர்ந்து இதே பாடசாலையில் கடமையாற்ற அனுமதிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X