Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாணத்தில், தாய், தந்தையை இழந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றையும், விசேட தேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்கான தனிப்பட்ட பேருந்து சேவை ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறினார்.
நேற்று, ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
“வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும், பெற்றோர் அதாவது தாய், தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகளுடைய கல்வி மேம்பாட்டுக்காக புலமை பரிசில் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“இதன் அடிப்படையில், 5 மாவட்டங்களிலும் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட மட்டத்தில் அந்த திட்டம் செயற்படுத்தப்படும்.
“அதேபோல், விசேட தேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பஸ் ஒன்றை யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கிடையில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேட தேவையுடையோருக்கான வசதிகளுடன் கூடியதாகவும், பாடசாலை மாணவிகள் பாதுகாப்பாக பயணிக்க கூடியதாகவும் இந்த பேருந்து அமைந்திருக்கும்.
“ஆசனங்கள் இல்லாமல், சக்கர நாற்காலியுடன் ஒருவர் அப்படியே பேருந்துக்குள் ஏறி பாதுகாப்பாக பயணிக்க கூடிய வகையில் இந்த பஸ் அமைந்திருக்கும். இந்த பஸ் சேவையும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும்“ என, ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago