2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அநாதையான முதியவருக்கு இறுதிக்கிரியை நடத்திய இளைஞர்கள்

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர்.

புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு அழைத்து வந்தனர்.

அவருக்கு தேவையான உடை மற்றும் உணவுகளை இளைஞர்கள் சுழற்சி முறையில் வழங்கி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோய் வாய்ப்பட்ட முதியவரை, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்தார்.

அவரது உடலைப் பொறுப்பேற்க உறவினர்கள் எவரும் முன்வராத நிலையில், இளைஞர்கள் முதியவரின் உடலைப் பொறுப்பேற்று, ஒன்று சேர்ந்து நிதி திரட்டி முதுpயவர்களின் இறுதிக் கிரியைகளை செய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .