2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அனந்தி அவைத்தலைவர் ஆகலாம்

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வட மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரனும் வடமாகாண அவைத்தலைவர் ஆகலாம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் புதன்கிழமை (30) நடைபெற்ற போது, கல்வி நியதிச் சட்டத்தின் திருத்தம் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆங்கிலத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நியதிச் சட்டத்தில் அவன், அவள் என்ற பதங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படவேண்டும். அவைத்தலைவர் என்பது chairman என்று இல்லாமல் chairperson என்று அழைப்பதன் ஊடாக இரண்டு பாலாருக்கும் உரித்துடையதாக்கலாம். இதன்மூலம் அனந்தி போன்றவர்களும் அவைத்தலைவர் ஆகலாம் என்றார்.

இதன்போது, தலைவர் என்பது ஆண் பதத்தைக் குறிப்பதாகவும், தலைவி என்பது பெண் பதம் என்றும் உறுப்பினர்கள் சிலர் குழம்பினர்.

இதன்போது எழுந்த விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைவர் என்பது பொதுவான சொல், இதில் இரண்டு பாலினரும் அடங்குவர் என விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X