2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு.

Freelancer   / 2022 ஜூன் 04 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கடற்கரையில் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில், குறித்த கடற்கரைக்கு அருகாமையில் சுடலை காணப்பட்டதாகவும், அதிலிருந்து மனித எச்சங்கள் கடல் அரிப்பின் மூலம் வெளிக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

வேறு சிலர் கருத்து தெரிவிக்கையில், கடலில்  காணாமல் போனவரின் மனித எச்சங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர் கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X