Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வேலனை பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதி இன்றி கட்டடங்கள் அமைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, உரிய விண்ணப்பப் பத்திரங்களை, அப்பகுதி உபஅலுவலகங்களில் பெற்று சபையின் முன் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு, வேலனை பிரதேசசபை செயலாளர் ஆ.குருநாதன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“வேலனை பிரதேசசபை நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில், வீடுகள் கட்டடங்கள் மதில்கள் மலசலகூடங்கள் கிணறுகள் அமைத்தலும் புதுப்பித்தல் அல்லது திருத்தவேலைகள் செய்தலும் தடை செய்யப்பட்டுள்ளது.
“எமது நிர்வாகத்துக்குட்பட்ட பிரதேசத்தில், மேற்படி கட்டட அமைப்பு புனரமைப்பு வேலைகள் அனுமதியின்றி மேற்கொள்ளல், வீடமைப்பு நகர சீர்திருத்தக் கட்டளைச் சட்டம் பிரிவு 268இன் பிரகாரம் தண்டணைக்குரிய குற்றமாகும். எனவே, உரிய லிண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட உரிய உப அலுவலகங்களில் பெற்று, சபையின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ளவும்.
“இவ்வாறு முன் அனுமதி பெறப்படாதக் கட்டடங்கள் யாவும், எவ்வித நட்டஈடும் வழங்கப்படாது, அனுமதியற்ற கட்டடமாகக் கருதி, சபையால் அகற்றப்படுவதுடன், அதற்கான தண்டப்பணத்தையும் சபைக்குச் செலுத்த வேண்டும். ஏற்கெனவே அனுமதிப் பெற்று ஒரு வருட காலத்தில், கட்டட வேலைகள் பூர்த்தியாகாதவிடத்து, அவ்விண்ணப்பதாரிகள் அனுமதியைப் புதுப்பித்துக் கொள்வதோடு, கட்டடத்தைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகள் உரிய அமைவுச்சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
“சபை எல்லைக்குள் குழாய்க்கிணறுகள், கிணறுகள் அமைப்பவர்கள் சபையின் அனுமதிப் பெற்று அமைத்தல் வேண்டும். மேலும், வேலனைப் பிரதேசத்தின் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக, வியாபார நிலையங்களுக்கு முன்னால் பொருட்களை வெளியே வைத்து விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago