Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 02 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
சுதந்திரமான போக்குவரத்தை மேற்கொள்ளமுடியாத நிலையில் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி கல்வி செயற்பாடுகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்று 26 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் கல்வி செயற்பாட்டை தொடர்வதற்கு ஜனாதிபதியால் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி கல்லூரி அதிபர்களிடம் ஒப்படைக்கபட்டன. இந்நிலையில், யுத்தத்தால் பாதிப்படைந்த கட்டடத்தொகுதியில் எஞ்சியதை விட மீதி கட்டடம் திருத்தப்பட்டு இன்றைய தினம் இப்பாடசாலைகள் தனது கல்விச்செயற்பாட்டை 150 மாணவர்களுடன் ஆரம்பித்தன.
கடந்த மார்ச் மாதம் இப்பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் குடியமர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகாக மேற்கொள்ளப்பட்டிருந்த வீதிமறியல் சோதனை கடவை இன்னமும் அகற்றப்படவில்லை.
மேற்படி கல்லூரிக்கு உட்செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து கல்லூரி திருத்த வேலைகளை மேற்பார்வை செய்ய சென்ற ஆசிரியர்களின் மோட்டார் வாகன இலக்கங்கள் மற்றும் அவர்களின் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன பதியப்பட்டு அவர்களின் கையெழுத்து பெறப்பட்ட பின்னர் உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கு சென்ற சிலர் குழுக்களாக சென்றவர்களை கண்டுகொள்ளாமல் இராணுவத்தினர் விட்டுவிட்டு தனியாக சென்றவர்களை வழிமறித்து அவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு உட்செல்ல அனுமதித்தனர்.
இந்நிலையில், பாடசாலைக்கு மட்டுமான அனுமதி வழங்கபட்டுள்ளமையால் பாடசாலையின் அருகில் இராணுவ முகாம்களும் இராணுவ நடமாட்டங்களும் காணப்படுகிறன. இந்நிலையில் பாடசாலையில் கல்வி பயிலும் 95 சதவீதமான மாணவர்கள் குறித்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசித்து வருபவர்கள். இம்மாணவர்கள் பாடசாலைக்கு உட்செல்வது தமது கற்றல் நடவடிக்கையினை தொடர்வது என்பது இவ்வாறான ஒரு சூழலிலேயே காணப்படுகிறது.
17 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
3 hours ago