2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அமெரிக்க பிரஜையின் உடைமைகள் திருட்டு

Editorial   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அமெரிக்க பிரஜை, இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார். அதன் ஒரு கட்டமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு  கடந்த 19ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார்.

இவ்வாறு படகில் யாழ்ப்பாணம் வந்தவர், குருநகர் கடற்பகுதியில் தனது படகை நிறுத்தி விட்டு, தங்குவதற்காக யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றுள்ளார்.

விடுதியில் தங்கி விட்டு மறுநாள் படகுக்கு சென்ற போது, படகில் இருந்த சுழியோடி கண்ணாடிகள், பாதுகாப்பு அங்கிகள், கடல் ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X