2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பலரது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Freelancer   / 2025 செப்டெம்பர் 27 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - சம்மாந்துறையில் பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில், பலரது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, மோட்டார் சைக்கிள்களை ஆவணம், காப்புறுதி இன்றி செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை மற்றும் தலைக்கவசம் அணியாது சென்றமை உள்ளிட்ட காரணங்களுக்கமைய அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன், பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 20க்கும் மேற்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X