2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்ற முடியாது

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 03 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண வைத்தியசாலைகளின் மருத்துவ கழிவுகளை அம்புலன்ஸ் வண்டி மூலம் ஏற்றி அகற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வடமாகாண வைத்தியசாலைகளில் சேரும் மருத்துவ கழிவுகளை அகற்ற அம்புலன்ஸ் வண்டிகளை வைத்தியசாலைகள் பயன்படுத்தி வந்துள்ளன.

அதனால் நோயாளர் காவு வண்டியின் சேவை பாதிக்கப்படுவதுடன், வண்டியின் சுகாதாரமும் பாதிக்கப்படுகின்றது. அதனை கருத்தில் கொண்டு நோயாளர் வண்டிகளில் மருத்துவ கழிவுகளை ஏற்றுவதை உடன் நிறுத்துமாறும் அதற்கு வேறு வண்டிகளை பயன்படுத்த சுகாதார பணிமனைகள் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X