2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘அரசமைப்பு உருவாக்கத்தத்தை ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்ற வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

சர்வதேசத்துக்கும் தமிழ் மக்களுக்கும் கொடுத்துள்ள வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஐனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்றி வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிரதான வீதியிலுள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வழிநடத்தல் குழுவானது எதிர்வரும் 11ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது கிடைக்கப்பட்ட மொழிபெயர்ப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்து உறுதி செய்த பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட புதிய அரசமைப்பு நகலானது அரசமைப்பு பேரவையில் சமர்பிக்கப்படும். இது முன்னேற்றமானதாக அமையும். அத்துடன் இது அரசமைப்பு பேரவையிலே பகிரங்கப்படுத்தப்பட்டு அது தொடர்பாக அங்கு விவாதங்கள் இடம்பெறும்.

அது மாத்திரமல்லாமல் நாடு முழுவதும் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்பு ஏற்படுத்தப்படுவதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தின் காலம் போதாமல் உள்ளது என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் அதனை நிறைவேற்ற முடியும் என்ற எண்ணம் உள்ளது.

இதேவேளை காலம் போதுமாக உள்ளது என்பது என்பது எமது கணிப்பாகும். ஆனால் இதனை நிறைவேற்ற ஜனாதிபதியும் பிரதமரும் பாடுபட வேண்டும். இது அவர்கள் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் கொடுத்த உறுதிமொழி என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X