Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுடைய அதிநவீன கைத்தொலைபேசிகள் மற்றும் ஏலக்காயை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற ஒருவர், வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் வியாழக்கிழமை (28) காலை இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன் அவரிடம் இருந்த 6 பயணப் பைகளில் இருந்து அதிநவீன கைத்தொலைபேசிகள் 165 மற்றும் 102 கிலோ கிராம் ஏலக்காய் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் கைத்தொலைபேசிகள் இறக்குமதி செய்ய, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தேவை, அதே நேரத்தில் ஏலக்காய் இறக்குமதி செய்ய அந் நாட்டிலும் இலங்கையிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் அனுமதி தேவையாகும்.
சந்தேக நபரை கைது செய்த, விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.கே.ஜி. கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .