2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

2 வருடங்களுக்கு முன் இறந்த கணவன்: திடீரென கர்ப்பமான மனைவி

Editorial   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கணவர் மறைந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவி குழந்தை பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயது சார்லோட் என்ற பெண்ணே தனது கணவரான சாம், மறைந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமாகி, ஆண் குழந்தையையும் பெற்​றெடுத்துள்ளார்.

2021ல் கடற்கரையில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு வாழ்க்கை பெரிதாகவே சோதனையாக இருந்தது. 2022ல் சாமுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததும், சிகிச்சை காரணமாக குழந்தை உருவாகும் திறன் பாதிக்கப்படும் என நினைத்து, அவர் தனது விந்துவை முன்கூட்டியே உறைய வைத்திருந்தார். ஆனால் சிகிச்சைக்கு பலனில்லை. ஏப்ரல் 2022ல் சாம் உயிரிழந்தார்.

எனினும், கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன், சார்லோட் IVF முறையில் கர்ப்பம் தரிக்க முயன்றார். முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்று, 2023 ஏப்ரலில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது.

“சாம்இறந்த பின்னர்   முதன்முறையாக மகிழ்ந்த தருணம் அது தான்” என உருக்கமாக சொல்கிறார் சார்லோட். கடந்த வருடம், தனது வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்தபோது, அறையில் சாமின் புகைப்படங்களை  வைத்திருந்ததாகவும், அவர் அருகிலிருந்து துணைநின்றார் போலவே உணர்ந்ததாகவும் கூறினார்.

தற்போது சார்லோட் தனது மகன் எலியாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மகனுக்காக சாமின் குரல் பதிவுகளையும், புகைப்படங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி, அவரது நினைவுகளை வாழ வைக்கிறார். “படத்துல அப்பாவைப் பார்த்தாலே ‘அப்பா’ன்னு சொல்றான்… இது எனக்கே கண்களில் கண்ணீரைக் கொண்டு வருகிறது” எனச் சொல்கிறார்.

ஒரு காதலின் ஆழமும், அறிவியலின் சாதனையும் இணைந்து நம்மை தக்கவைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சம்பவம், உணர்வையும் வியப்பையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தி உள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .