Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 23 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
போர்க் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணையில் எடுக்கின்ற வேலையையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் வடமாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன், இப்போது அரசாங்கம் பொய் உரைப்பதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் கூட்டமைப்பினர் கூறுவது வேடிக்கையானதென்றும் கூறினார்.
யாழ்ப்பாணம் - சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து, தொடர்ந்துரைத்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில், மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது, ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கடும் அதிருப்திக்குள் உள்ளாக்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் கவனத்திற் கொள்ளாமல் தங்களுடைய நாடுகளின் நலன்களின் அடிப்படையிலையே இந்தத் தீர்மானமும் கால அவகாசமும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்படுவது போன்றதாகவே பார்க்கப்படுவதாகவும், ஆகையால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்திருப்பதாகவும் கூறினார்.
இவ்வாறான நிலையில் கூட பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைக் கோரி நிற்கின்ற போதும் அந்த நீதியை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லாத நிலைமையே காணப்படுவதாகத் தெரிவித்த அவர், ஆனாலும் தமிழ் மக்களுக்காகச் செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போர்க்குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டகளிலிருந்த இலங்கை அரசாங்கத்தை விடுவித்து அவர்களைப் பாதுகாத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அது மாத்திரமல்லாமல், சர்வதேசத்தின் பிடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலைகளையே கூட்டமைப்பினர் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இதனை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லையெனவும் இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இருப்பதாகவும் கூறினார்.
ஆகையால், தான் தமக்கான நீதியைக் கோரி பல வழிகளிலும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத் தொடரின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்ததாகத் தெரிவித்த அவர், அந்தக் கடிதத்தில் என்ன விடயம் குறிப்பிடப்பட்டிருக்கின்றதென்பதை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் பல தடவைகள் கோரியிருந்த போதும், அது என்னவென்று இதுவரையில் வெளிப்படுத்தப்படாத நிலையே உள்ளது. அது ஒரு புரியாத புதிராகவே இருப்பதால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று கோருவதாகவும், அவர் தெரிவித்தார்.
11 minute ago
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
35 minute ago