Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்லாது, அரசாங்கமே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை தாம் எதிர்பார்ப்பதாக, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் - குருநகரில் அமைந்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், தேசிய சிறைக்கைதிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, சிறை கூடத்திற்குள் சிறைக்கைதிகள் இருப்பதைப் போன்ற உருவ பொம்மைக்கு, அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட தலைவர் விளக்கு ஏற்றினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் உள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20 ஆயிரத்து 728 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் உண்மையில் நாட்டின் சிறைக் கட்டமைப்பின் பிரகாரம், சுமார் 12,000 பகுதிகளில் மாத்திரமே கைதிகளைத் தடுத்து வைத்து பராமரிக்க முடியும் என சிறைத்துறை தலைமையகம் தெரிவிக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
சட்டத்துறை காரியத்திலும் நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்து கிடக்கின்றன எனத் தெரிவித்த அவர், வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்து வருகின்ற போதிலும், பெரும்பாலான வழக்கு விசாரணைகள் எடுக்கப்படாமல், நீண்ட இழத்தடிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது எனவும் கூறினார்.
விசேடமாக இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்த அவர், 'கடந்த இரண்டு வருடங்களாக நீதிமன்ற நடவடிக்கைகள் சீரான முறையில் இயங்க முடியாத நிலை தொடர்கிறது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தமது சட்டத்தரணிகளை சந்தித்து, வழக்கு விடயங்கள் தொடர்பில் பேச முடியாது உள்ளது. ஸ்கைப் தொழில்நுட்பத்தின் வழியே நீதவான் நீதிமன்ற வழக்குகள் இடம்பெற்று வருகின்ற போதும் பாதிக்கப்பட்ட தரப்பு நியாயங்களை நேரடியாகக் எடுத்துக்கூறி முறையிடுவதில் நடைமுறைகள் காணப்படுகின்றன' எனவும் கூறினார்.
அத்துடன், ஊட்டச்சத்து உடன் கூடிய போசாக்கான உணவு போதுமான மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஈடுசெய்ய முடியாமல், கைதிகள் விரட்டி அடைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர் சாடினார்.
‘இதனால் ஏற்படும் தொடர் மன அழுத்தமானது, வன்முறை, போதைக்கு அடிமைப்படுத்தல், தற்கொலை எண்ணம் போன்ற விபரீத நிலைக்கு இட்டுச் செல்லும் அபாயம் ஏற்படலாம். கைதிகளும் மனிதர்களே என்பது அவர்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமை என்பதை தேசிய சிறைக்கைதிகள் தினத்தில் நினைவூட்டுகின்றோம்” என்றும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
29 minute ago