2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அரச உத்தியோகஸ்தர் வீட்டில் கைவரிசை

Princiya Dixci   / 2022 மார்ச் 30 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

நாவற்குழி பகுதியில் வசிக்கும் அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டை பட்டப்பகலில் உடைத்து 7 பவுண் நகையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தது வந்தனர்.

இந்நிலையில், மேற்படி குற்றத்தில் ஈடுப்பட்ட இருவரை, சந்தேகத்தின் பேரில் நேற்று (29) பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட நகையையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம், அராலி வடக்கு, செட்டியார் மடம் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பணம் என்பவை திருடப்பட்டுள்ளன.

பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தவர்கள் வெளியில் சென்று இருந்த சமயம் , வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .