Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூன் 06 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
'நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் எமது பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கூற முடியாது. எமது பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. எமது மக்களின் தொழில்வாய்ப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் அரசாங்க வேலைகளில் உள்வாங்குவதில் புறுக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் முழுநாள் விவாதம் ஒன்றை நாம் நாடாளுமன்றத்தில் செய்யவுள்ளோம். ஜனாதிபதி, பிரதமரின் கவனத்துக்கு இதை கொண்டுவருவோம்' என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
'நாட்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. இதன்மூலம் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அவ்வாறு கிடைக்கும் தீர்வு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்வாக இருக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம், இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் ஆலயத்தில்; புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுமண்டபம் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
'புதிய அரசியல் சாசனத்தினூடாக கொண்டுவரப்படும் அரசியல் தீர்வானது மக்களால் ஏற்றுகொள்ளப்படக்கூடியதாக இருக்கும் அதேவேளை, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும்.
நாம் ஒருமித்த ஒரு நாட்டுக்;குள் வாழக்கூடிய வகையிலும் மக்களின் இறைமை பகிர்ந்தளிக்கப்படுகின்ற அடிப்படையில் மக்கள் தமது பிராந்தியங்களில், மாகாணங்களில் கணிசமான அளவிலேனும் தம்மை தாம் ஆளும் சுயாட்சி முறைமை தேவை.
இம்முறைமை பல நாடுகளில் உள்ளது. நாம் புதிதாக ஒன்றையும் கேட்கவில்லை. எமது மக்களின் பிறப்பு உரிமையையே கேட்கின்றோம். அதனை யாரும் மறுக்கமுடியாது. இதனை பெற்றுக்கொள்வத்றகாக நாம் பல்வேறுப்பட்ட போராட்டங்களையும் இழப்புக்களையும் கடந்து வந்துள்ளோம்' என்றார்.
போருக்கு முன்னரைவிட போருக்கு பின்னர் தற்போது எமது பிரச்சினை அதிகமாக சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரால் முன்வைக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கைக்கு முன்னதாக இல்ஙகை அரசாங்கம் தனது நிலைப்பாடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்' என அவர் குறிப்பிட்டார்.
'உண்மையான நீதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரம், மீண்டும் இவ்வாறு இடம்பெறாமல் இருப்பதற்கான ஒழுங்குமுறை இதுவே தற்போதைய நிலைமையாக உள்ளது. இது இடம்பெற்றால் நாட்டில் விசுவாசமான நல்லிணக்கம் ஏற்பட்டு சமத்துவத்தின் அடிப்படையில் குறித்த விடயங்கள் செய்யப்படவேண்டும்.
எமக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை நாம் பக்குவமாகவும் ஒழுங்காகவும் செயற்படுத்தவேண்டும். வன்முறையை முழுமையாக நிராகரிக்கவேண்டும். எமது மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. வன்முறை மூலம் இல்லாமல் அனைவரது ஆதரவுடனும் தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டும்.
இன்று சர்வதேச சமூகத்தின் ஆதரவு எமது பிரச்சனை சார்பில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, எமது இழப்புக்கள் வீண்போகாமல் அவை அர்த்தமானதாக இருக்கவேண்டும். வன்முறையை பின்பற்றுவதன் மூலம் எதையும் சாதிக்கமுடியாது. இன்று எமக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக உள்ளது' என்றார்.
15 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
3 hours ago