Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்தால் வீட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது போன்று, அரச நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, யாழ்ப்பாணம் - நல்லூர் நாயன்மார்க்கட்டு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - நல்லூர் நாயன்மார்க்கட்டு சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு வருவதாக, அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாயன்மார்க்கட்டு குளத்தடிப் பிள்ளையாருக்கு அண்மையில் சமுர்த்தி வங்கி இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் பணிபுரிபவர்கள் அவர்களின் பாவனையின் பின்னான கழிவுப்பொருள்கள், வெற்றுத் தகர பேணிகள், வர்ணபூச்சு பேணிகள் என்பவற்றை வங்கி அமைவிடத்துக்கு அருகே வீசிவிட்டுச் செல்கின்றனர்.
“இதேவேளை, வேறு சிலரும் அந்த பகுதியில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, மழை நீர் தேங்கி டெங்கு நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
“வீடுகள் தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்கள், டெங்கு பரவும் சூழலை வைத்திருந்தால் வீட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது போன்று, அரச நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
“இது தொடர்பில், எமது பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீரின்மை தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025