Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான செயற்பாட்டை, வடக்கு முதலமைச்சர் தலைமைதாங்கி செயற்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகள், அவர்களின் பெற்றோர் மூலமாக தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், 'நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இந் நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் பலர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
சில அரசியல்வாதிகள் தொடர்பில் அரசியல் கைதிகளுக்கும் அவர்களின் பெற்றோராகிய எமக்கும் நம்பிக்கை இழந்து போயுள்ளது. தொடர்ந்தும் அரசியல் கைதிகளை கைதிகளாகவே வைத்திருக்கவும் சில தமிழ் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர் என்ற உண்மை தெரியவருகின்றது.
இந்நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை தொடர்பாக புதிய சிந்தனைகளை முன்வைத்து வரும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசுடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடலை நடத்தி, விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும் என அரசியல் கைதிகள் விரும்புகின்றனர். அதனையே பெற்றோராகிய நாமும் விரும்புகின்றோம்.
இது தொடர்பாக வடக்கு முதலமைச்சருக்கு அரசியல் கைதிகள் உத்தியோகபூர்வமாக கோரிக்கையையும் விடுக்கவுள்ளனர் என்பதுடன் அவர்களின்; பெற்றோர் சார்பில் நாமும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்' என அவர்கள் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
3 hours ago