2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துவிட்டேன்

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 19ஆம் திகதி வரையான, யுத்தம் தீவிரமடைந்த காலப்பகுதியில் காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்' என காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

அமர்வுகளின் போது, காணாமற்போனவர் ஒருவர் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, விசாரணைகளை மேற்கொள்வது கடினமாகவுள்ளது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது பரிசீலணை செய்கின்றோம்.

1983ஆம் ஆண்டு காணாமற்போனோர் தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதுவரை 18 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன' என்றார்.

'இறுதி யுத்த காலப்பகுதியின் போது 40 ஆயிரம் பேர் வரை காணாமற்போயுள்ளனர் என தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது. எனினும், எமது விசாரணைகளின் மூலமும் அக்காலப்பகுதியில் குறிப்பிட்டளவு மக்கள் காணாமற்போயுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X