Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக அலைபேசிகளை திருடி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை, வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அலைபேசிகள் திருடு போயுள்ளன. இதனை உணர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமெராவின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு நேற்றும் குறித்த இளைஞன் வருகை தந்துள்ளார். இதன் போது, நோயாளர் விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த தாதியர் ஒருவரின் அலைபேசியை திருட முற்பட்ட வேளையில், மடக்கிப்பிடிப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago