2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அலைபேசி திருடியவர் ஒரு மாதத்தின் பின்னர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 08 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

பண்டத்தரிப்பு, சாந்தை பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்னர் வீடொன்றுக்குள் புகுந்து 16 ஆயிரத்து 500 பெறுமதியான அலைபேசியை திருடிய சந்தேகநபரை புதன்கிழமை (08) கைது செய்ததாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் எனப் பொலிஸார் கூறினார்.

வீட்டுக்குள் அத்துமீறிய நபர், மேசையில் வைக்கப்பட்டிருந்த கைபேசியை திருடியிருந்தார். இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X