2025 மே 10, சனிக்கிழமை

அழகு சாதன விற்பனை நிலையம், எரிந்து சேதம்

Janu   / 2025 மே 08 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் ஒழுக்கு காரணமாக யாழ்ப்பாணம் அச்சுவேலி நகரப் பகுதியில் உள்ள அழகு சாதன விற்பனை நிலையமொன்று புதன்கிழமை (07) மாலை பகுதியளவில் எரிந்து சேதமானது.

விற்பனை நிலையத்தை பூட்டுவதற்கு உரிமையாளர் முயற்சி செய்த போது, திடீரென விற்பனை நிலையத்தின் பின் பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு  வேகமாக பரவியுள்ளது.

புகை வருவதை கண்ணுற்ற அயல் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்  யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதர்ஷன் வினோத்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X