Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
“அவளுக்கு ஒரு வாக்கு” எனும் தொனிப்பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்குச் சேகரிக்கும் பிரசாரப் பணி, யாழ்ப்பாணத்தில், இன்று ஆரம்பமானது.
வடமாகாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புகளில் அங்கம் வகிக்கும் பெண்களின் கூட்டிணைவில், இந்தப் பிரசாரப் பணி ஆரம்பமானது.
இந்தப் பிரசார பணி தொடர்பில் செயற்பாட்டாளர்களான எஸ். தீபா, ஜ.நாகரஞ்சினி, எஸ்.சஹானா மற்றும் லயன் ஆனந்தி ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில்,
“பெண்கள் அரசியலில் ஈடுபடல் வேண்டுமெனவும் தமது உரிமை தொடர்பில் பெண்களால் தான் பேச முடியுமெனவும் கூறினர்.
எந்தக் கட்சி என்று தாம் குறிப்பிடவில்லையெனத் தெரிவித்த அவர்கள், கட்சிகளுக்கு அப்பால் ஆளுமையான கெட்டித்தனமுடைய பெண்களை தாம் தான் தெரிவு செய்ய வேண்டுமென்றனர்.
“அந்த வகையில், மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை மட்டும் பெண்களுக்கு வழங்குவதனூடாக பெண் பிரதிநிதித்துவத்தை அங்கிகரிக்கச் செய்வோம். இதனைத்தான் நாம் அனைத்து பெண்களிடமும் கோரி நிற்கின்றோம்” எனவும் தெரிவித்தனர்.
இதன்போது, வீடுகள் தோறும் செல்லும் இவர்கள், பெண் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் செயற்பாடுகள் கொக்குவில், யாழ்ய்பாணம், நாவாந்துறை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
மன்னார், வன்னி, முல்லை ஆகிய மாவட்டங்ளில் இது தொடர்பில் வீதிநாடகங்ளை மஹாலட்சுமி குருசாந்தன் தலைமையிலான மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago