2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அஸ்கிரிய மஹாநாயக்கர் யாழுக்கு விஜயம்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 31 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி அஸ்கிரிய மஹாநாயக்கர் சங்கைக்குரிய வரகாகொடா ஸ்ரீ பஞ்ஞான ஞானரத்தின விதான, யாழ்ப்பாணத்துக்கு ஆன்மீகச் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளார்.  

பலாலி விமான நிலையத்துக்கு, செவ்வாய்க்கிழமை (29) மாலை வந்தடைந்த மஹாநாயக்கரை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி வரவேற்றார். 

அத்துடன், வடக்கு கட்டளைத் தளபதி, பலாலி விமானப்படை தளபதி ஆகியோரும் மஹாநாயக்கரை வரவேற்று, ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர். 

அங்கு, விசேட சந்திப்பொன்றை நடத்திய மஹாநாயக்கர், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின், தற்போதைய நிலைமை தொடர்பில், இராணுவ உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.  

இதேவேளை, யுத்தத்துக்குப் பின்னர், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மீள் உருவாக்கத்துக்கு, இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பிலும் மஹாநாயக்கர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். 

இராணுவத்தால் கீரிமலையில் அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களையும் அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் புராதன இடங்களான ஜம்புகோளப்பட்டினம், கந்தரோடை விகாரை என்பனவற்றிக்கும் அவர் சென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X