Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 20 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
நாடாளுமன்றத் தேர்தலில், ஈரோஸ் கட்சிக்கு ஓர் ஆசனமாவது கிடைக்காவிட்டால், தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பதே இல்லாத அவல நிலை ஏற்படுமென்று, அந்தக் கட்சியின் தலைமை வேட்பாளர் ரவிராஜ் என்றழைக்கப்படும் சி.முருகதாஸ் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில், நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த 70 வருடங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதை கூறினார்களோ, அதே விடயத்தை தான், இம்முறை வௌியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறுகின்றார்களென்றார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், சமயல் செய்வது போன்றதெனத் தெரிவித்த அவர், அதாவது, ஓகஸ்ட் 5ஆம் திகதி சமையலுக்காக உலையில் அரிசி போடுவார்களெனவும் அந்த அரிசி வேகவில்லை என்று பெய் சொல்லியே, எதிர்வரும் 5 வருடங்களைக் கழித்து விடுவார்களெனவும் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பால் விடுவிக்க முடியாதெனத் தெரிவித்த முருகதாஸ், மாறாக இன்னமும் அரசியல் கைதிகளை உருவாக்க அல்லது எண்ணிக்கையை அதிகரிக்கவே அவர்களால் முடியுமெனவும் கூறினார்.
கூட்டமைப்பினரிடம் அபிவிருத்தியோ அல்லது அரசியல் தீர்வு குறித்தோ எந்தவொரு பொறிமுறையும் இல்லையெனத் தெரிவித்த அவர், தலைவரின் தூர நோக்கத்தாலேயே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதெனவும் கூறினார்.
ஆனால், அந்த நோக்கத்தைக் கூட்டமைப்பால் நிறைவேற்ற முடியாதெனவும்
கூட்டமைப்பினர் போன்றே நீதியரசர் விக்னேஸ்வரனும் திட்டங்கள் எதுவும் இல்லாத கதைகளையே கூறிவருகின்றாரெனவும் அவராலும் தமிழினத்துக்கு எந்தவிதமான பயனையும் பெற்றுக்கொடுக்க முடியாதெனவும், முருகதாஸ் கூறினார்.
தம்மைப் பொறுத்தவரையில், அபிவிருத்தி, அரசியல் உரிமை என்பன சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், உரிமை என்று பட்டினியால் சாகக் கூடாதெனவும் கூறினார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஈரோஸ் கட்சிக்கு ஓர் ஆசனமாவது கிடைக்காவிட்டால், தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லாத அவல நிலை ஏற்படுமெனவும், முருகதாஸ் தெரிவித்தார்.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025