2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேரையும் தொடர்ந்தும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் கடந்த  ஓகஸ்ட் மாதம் 16ஆம்; திகதி கனரக வாகனம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் குறித்த ஒன்பது பேரையும் கைது செய்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X