2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

கோப்பாய் - கைதடி பிரதான வீதியின் கோப்பாய் பாலத்துக்கு அருகில், இருந்து இன்று (01) ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி - வடக்கு சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த கேந்திராஜா கோணேஸ்வரன் (வயது 49) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (31) இரவு சாவகச்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்து தெல்லிப்பழை கொல்லங்கலட்டியில் உள்ள தாயாரின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சடலத்துக்கு அருகில் இருந்த இவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .