Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 21 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதுக்கு ஈ.பி.டி.பி கட்சியிடம் பொது கொள்கையின் அடிப்படையில் ஆதரவு கோரிய வெளிப்படையான உண்மைச் சம்பவத்தினை யாரும் மறுக்க முடியாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளரும், சட்டத்தரணியுமான சிறிகாந்தா ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அஅவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளுராட்சி சபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை எழுந்த நிலையில், கல்வியாளர்களும், மதத் தலைவர்களும் எங்களிடத்தில் பொது கொள்கை ஒன்றினை முன்னிறுத்தி, ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேசி இணக்கப்பாட்டுடன், ஆட்சியமைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதனடிப்படையில் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அனைத்து கட்சிகளுடனும் கூட்டமைப்பினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பெரும்பாலான கட்சிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக எமது கோரிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி உடனடியாகவே நிராகரித்திருந்தது.
இதனடிப்படையில்தான் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகத்துடன் நாடாளுமன்றத்தில் வைத்து ரேலோ பேச்சுவார்த்தை நடத்தியது. அப் பேச்சுவார்த்தையில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாகருணாகரன் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தோம்.
இப்பேச்சுவார்த்தையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள சபைகளில் அதிக ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதாகும்.
இதன் போது நெடுந்தீவு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி கட்சி ஆட்சி அமைப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவு தரும். ஆதே போன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய சபைகளில் கூட்டமைப்பு அதிகம் ஆசனங்களை பெற்ற இடங்களில் ஆட்சி அமைக்க ஈ.பி.டி.பி ஆதரவு தர வேண்டும் என்ற பொது கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கூட்டமைப்பினை சேர்ந்தவர்களும், ஈ.பி.டி.பியின் தலைவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் பேசியிருந்தார்கள் என்பது உண்மை” என்றார். இதேவேளை “ஈபிடிபியினர் ஆதாரங்களை வெளியிடுவதாக கூறுகின்ற நிலையில் அவர்கள் அத்தகைய ஆதாரங்களை வெளியிட வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago