Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லை ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) மாலை யாழ் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தினை புனிதபூமியாக பிரகடனப்படுத்துமாறு ஆலய நிர்வாகத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் சில நாட்களில் ஆலய நிர்வாகத்தினரையும் பிரதம குருக்களையும் சந்திக்க இருப்பதாகவும், ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை வடமாகாணத்தில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்து மாநாடு ஒன்றினை நடத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் மிகவிரைவில் வடக்கில் இந்து மாநாடொன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .