எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த இரு பிள்ளைகளின் கல்வி செலவுக்கு ஆளுநரால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து இரு பிள்ளைகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் போது ஜனாதிபதி புத்தாண்டுக்கு முன்னர் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என பிள்ளைகளுக்கு நம்பிக்கை வழங்கி இருந்தார். அதனால் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் காத்திருந்தன. ஆனால் ஆனந்த சுதாகரன் இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை
அந்நிலையில் சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வின் இரவு விருந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்றது.
ஆளுநர் றெஜினோல்குரே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறையில் அரசியல் கைதியாக வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஆளுநரினால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
மாதாந்தோறும் இவர்களின் கல்விச் செலவிற்காக ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் யாழில் உள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனம் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாயினை வழங்க முன்வந்துள்ளது.
அந்நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவமோகன் யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் உட்பட மாகாணசபை அமைச்சர்கள் அதிகாரிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
38 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago