2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆமைகளை கொண்டு சென்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 24 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என். நிபோஜன்

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பத்தாங்கட்டைப் பகுதியில் 06 ஆமைகளை, உரப்பையொன்றில் வைத்து மோட்டர் சைக்கிளில் கொண்டு சென்றவரை, நேற்று வியாழக்கிழமை (23) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

அக்கராயன் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மாலை 05 மணியளவில், ஆறு ஆமைகளை உரப்பை ஒன்றில் வைத்து மோட்டர் சைக்கில் கொண்டு சென்ற வேளை, அக்கராயன்  பொலிஸாரால்  இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளை, கிளிநொச்சி  நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், சந்தேநபரையும் ஆஜர்படுத்தவுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X