2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆயுதம் ஏதுவும் இல்லை

Princiya Dixci   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் சுண்டிக்குளம் உழவனூர் 10ஆம் கட்டைப் பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆயுதங்களைத் தேடி, நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் எவ்வித அயுதங்களும் கிடைக்கவில்லை.

எதுவித ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணியானது கைவிடப்பட்டுள்ளது.

மேற்படி காணியில் வெடிபொருட்கள் இருப்பதாக விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது. இதனை தர்மபுரம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்த குற்றத்தடுப்புப் பொலிஸார், தர்மபுரம் பொலிஸார் ஊடாக அவ் இடத்தைத் தோண்டுவதற்கான கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றனர்.

அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து, அந்த இடத்தை தோண்டுவதற்கான நடவடிக்கையில் குற்றத் தடுப்புப் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் தர்மபுரம் பொலிஸார் ஆகியோர் இணைந்தே அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X