Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2015 நவம்பர் 13 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரியும், வடமாகாணம் முழுவதுமாக இந்தக் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வீதியில் டயர் எரிக்கப்படுதல், கடைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளுதல் போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி படுகொலையைக் கண்டித்து கடந்த மே மாதம் 20ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலின் போது, பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று, யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான சம்பவங்கள் இம்முறையும் நடைபெறாமல் தவிர்க்கும் பொருட்டு ஆயுதம் தாங்கிய பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அசம்பாவிதங்கள் இடம்பெறும் வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago