Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 22 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி பிரதேச ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவருக்கு, கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் இன்று (22) தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவர், 14ஆம் திகதியன்று யாழ். கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அதில் 50 பேர் பங்குபற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த அதிபர், தான் கடமையாற்றும் பாடசாலையில் வகுப்புகளை நடத்தியுள்ளதோடு பெற்றோர் கலந்துரையாடலையும் நடத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி, உரும்பிராயில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.
இவருடன் தொடர்பில் இருந்த, இவரோடு நிகழ்வுகளில் பங்கேற்ற பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இவரது வீட்டாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இவருடன் திணைக்களக் கூட்டத்தில் பங்குபற்றிய அதிபர்கள், கல்வி அதிகாரிகள் இதுவரையில் தனிமைப்படுத்தப்படவில்லை.
குறித்த அதிபரின் பாடசாலையில், இந்த மாதத்தின் முதல் வாரத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்பட்டது. அத்துடன், இம்மாதம் 9ஆம் திகதியன்று, குறித்த பாடசாலை அதிபர் முதலாவது கொரோனா தடுப்பூசியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago