2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆலயத்தில் திருடியவர் கைது

Freelancer   / 2022 நவம்பர் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி துன்னாலை ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட இலட்சக் கணக்கான பெறுமதியான பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் என்பன திருடப்பட்டு இருந்தன.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார்  22 வயது இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X