Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 ஜூலை 10 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, இன்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த மாதங்களில், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆனந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு மேற்கொண்டமை, கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயார் கடைக்கு முன் வாள்வெட்டு சம்பவம் மேற்கொண்டமை, நவாப்லி பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு முன்னால், இரவு நேரம், ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியமை, சுதுமலைப் பகுதியில் வைத்து ஒருவரின் கையை வெட்டித் துண்டித்தமை போன்ற பாரதூர சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்ட இருவரும் தேடப்பட்டு வந்திருந்தனர்.
ஏற்கெனவே ஐவர் கைதாகியுள்ள நிலையில், குறித்த இரண்டு இளைஞர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைதாக வேண்டியுள்ளதாக, பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்ய, இரகசியப் பொலிஸார், தொடர்ந்தும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
18 minute ago
1 hours ago
9 hours ago
27 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
9 hours ago
27 Sep 2025