2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

ஆவா குழுவின் மற்றொரு உறுப்பினர் கைது

Editorial   / 2017 நவம்பர் 29 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் ஆவா குழுவின் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் நேற்று(28) பகல் 12.15 மணியளவில் கொக்குவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் கோப்பாய்,யாழ்ப்பாணம்,மானிப்பாய் உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு,கொள்ளை மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியமை போன்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரை இன்றைய தினம் (29)யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .