Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 03 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் “ஆவா” குழுவினருக்கு சுவிட்ஷர்லாந்தின் தமிழ் அமைப்பொன்று உதவியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த அமைப்பே ஆவா குழுவினருக்கு நிதியுதவியையும்,ஆலாசனைகளையும் வழங்கிவந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் யாழில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவின் பிரதான சந்தேகநபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகள் மூலமே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுவிட்ஷர்லாந்தில் இயங்கி வரும் குறித்த குழு இன்றும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பு விடயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த அமைப்பானது ஆவா குழுவில் உள்ள பிரசாந்தன் என்பவருடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ளதாகவும்,அவரது அறிவுரைக்கமையவே ஆவா குழு செயற்பட்டு வருவதாகவும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவின் பிரதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரசாந்தன் எனப்படும் குறித்த நபரை தான் ஒருபோதும் கண்டதில்லை என்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவின் பிரதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago