Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜிதா
ஆவா குழுவைச் சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம். ஹகந்தவெல தெரிவித்துள்ளார்.
யாழ்., கொக்குவில் - பொற்பதி பகுதியைச் சேர்ந்த அந்தோணி மேரிக்சன் ஜூட் (வயது 18) எனும் இளைஞனே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து சிறு கைகோடரி ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொறுப்பதிகாரி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பற்றி தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை நேற்று (24) கைதுசெய்துள்ளோம்.
“பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் உணவகம் உடைக்கப்பட்டமை, முடமாவடி பகுதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமாக்கப்பட்டு வீடு உடைக்கபப்ட்டமை, கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி உடைக்கப்பட்டமை மற்றும் ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்ற தனு ராக்ஸ் குழுவை சேர்ந்த மானிப்பாயில் வசிக்கும் தனுவின் வீட்டை உடைத்தமை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் இவர் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளார் என்பதனை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளோம்.
“தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். கைது செய்த நபரை சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
39 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025