Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம்-மீசாலை பிரதேசத்தில் இரண்டு பேர் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்று (4) இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது காயமடைந்த இரண்டு இளைஞர்களும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
20 வயதான செல்வராஜ் கஜீவதன் மற்றும் 17 வயதான அல்பட் அலெக்ஸ் ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன்,சாவகச்சேரியில் இயங்கிவரும் “அஜித்” குழுவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று(4) பகல் 11.15 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம்(5) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025