Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 20 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, கைது செய்வதற்காக தாம் துரத்தியதாகவும் அதன்போது அவர்கள் விபத்துக்குள்ளான நிலையில் தப்பிச் சென்றுள்ளதாகவும், யாழ்ப்பாணப் பொலிஸார், இன்று (20) தெரிவித்தனர்.
இச்சம்பவம், கொக்குவில் சந்தியில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை, கொக்குவில் சந்திக்கு அருகில் பொலிஸார் மறிக்க முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற இருவரையும், பொலிஸார் துரத்திச் சென்ற வேளையில், கொக்குவில் சந்தியில் வைத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் நோக்கி வந்து கொண்டிருந்த காருடன் மோதி, இளைஞர்கள் இருவரும் விபத்துக்குள்ளானர்கள்.
இதையடுத்து, குறித்த இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே, மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது, விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஆவா குழுவினருடையது எனவும் தப்பிச்சென்ற இருவரும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
6 hours ago