2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இந்தியப் படகுகளிலிருந்து எண்ணெய் கசிவு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மே 29 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - கிராஞ்சி, இலவங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 35க்கும் ​மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகளிலிருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவுகளால், கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன், இந்தப் பகுதியில் தொழில் செய்யவேண்டிய 45க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய கடற்பகுதிகளில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35க்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற கட்டளைக்கமைவாக, இலவங்குடா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இப்படகுகளில் இருந்து ​எண்ணெய் கசிந்து குறித்த கடற்பகுதியில் பரவி வருவதால், அந்தப் பிரதேசத்திலுள்ள கடல்வாழ் உயிரினங்கள் தினமும் இறக்கின்றனவெனத் தெரிவிக்கின்ற பிரதேசக் கடற்றொழிலாளர்கள், இந்தப் பகுதியில் சிறகுவலை, இறால்மடி, நண்டுத்தொழில், தூண்டல் போன்ற பாராம்பரியத் தொழில்களைச் செய்துவந்த 45க்கும் மேற்பட்ட தொழிலாளர்களது தொழில்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதெனவும் கூறுகின்றனர்.

குறித்த இந்தியப் படகுகளை வேறு இடத்துக்கு மாற்றி, தமது தொழிலைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு கோரிக்கை விடுக்கும் பிரதேசக் கடற்றொழிலாளர்கள், அண்மையில் பூநகரிப் பிரதேசத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது, இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப் பட்டதாகவும் இப்படகுகளை அகற்றித் தருவதாக, இதன்போது அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அவை அகற்றப்படவில்லையெனத் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .