2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எஸ் தில்லைநாதன் 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல், மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) காலை வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் ஜெ.கஜநிதிபாலனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 7ஆம் திகதி இரவு,  நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதேவேளை, வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் வைத்து உள்ளுர் மீனவர்களால் பிடிக்கப்பட்டு, கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களுக்கு தலா 10 ஆண்டு காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை பருத்தித்துறை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அத்துமீறி மீன் பிடித்தல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட இவர்களின் படகுகளை அவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இவர்களின் உடமைகளை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் பணித்ததுடன், அவர்களை தமது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் பணித்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X