Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய படகுகளின் சட்டவிரோமான மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து, வடமாகாண மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும் இலங்கையின் கடல்சார் வளங்களை பாதுகாப்பதற்குமான உதவிகள் கோரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவுக்கு வடமாகாண மீனவர் அமைப்புக்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளன.
யாழ்ப்பாணம் மீனவர் சங்க சமாசங்களின் சம்மேளனத்தலைவர் அந்தோனி எமிலியாம்பிள்ளை, மன்னார் மீனவர் சங்க சமாசங்களின் சம்மேளனத்தலைவர் என்.எம்.அலாம், கிளிநொச்சி மீனவர் சங்க சமாசங்களின் சம்மேளனத்தலைவர் யோசப் பிரான்சிஸ், முல்லைத்தீவு மீனவர் சங்க சமாசங்களின் சம்மேளனத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஆகியோர் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
'இலங்கையில் மோதல் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மீனவ சமூகங்கள் 30 வருடங்களாக மீன்பிடித்து, சம்பாதித்து வாழ்வதற்காக மிகவும் கஷ்டப்பட்டுப் போராடினார்கள். 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் வடமாகாண மீனவ சமூகங்கள் தங்களது வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதிலும் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதிலும் அதிக நம்பிக்கையான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.
ஆயிரக்கணக்கான இந்தியப் படகுகள், இழுவைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் ஆகியன ஒவ்வொரு நாளும் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதால் வடமாகாண மீனவ சமூகங்களின் எதிர்பார்ப்புகள் தடைபடுகின்றன.
வடமாகாண மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும் இலங்கையின் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்குமாக பயன்தரக்கூடிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் தங்களிடம் வேண்டுகின்றோம்.
இலங்கைக் கடற்பரப்பில் இந்தியப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத, அறிவிப்புச் செய்யப்படாத மற்றும் ஒழுங்கு பிரமாணப்படுத்தப்படாத மீன்பிடித்தல் நடவடிக்கைகளை தயவுசெய்து நிறுத்துங்கள்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
3 hours ago