2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

இரட்டைக் கொலை; பிணையில் வந்தவர் தப்பிக்கையில் கைது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

மனைவி மற்றும் பிள்ளையைப் படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நபரொருவர், இந்தியாவுக்குத் தப்பி செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குச் தப்பி செல்ல முற்பட்ட நபரையும், அவரை அழைத்துச் சென்ற படகோட்டியையும் கடற்படையினர், இன்று (10) செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இலங்கை, இந்திய பணத்தாள்களும் இரு அலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

தப்பி செல்ல முற்பட்ட நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில், அந்நபர், மனைவி மற்றும் பிள்ளையை  படுகொலை செய்தார் எனும்  குற்றச்சாட்டில் திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை  தாக்கல்  செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்தியா தப்பி செல்ல முற்பட்டுளார் எனவும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .