Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஜூன் 12 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி இரணைதீவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள், கிளிநொச்சி மாவட்டச் செயலர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் இரணைதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி இரணைதீவிற்கு படகுகளில் செல்வதென சனிக்கிழமை (11) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு போர் ஏற்பட்ட பின்னர் பூநகரி இரணைதீவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து முழங்காவில் இரணைமாதா நகரில் குடியமர்ந்துள்ளனர்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரிப் பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் இரணைதீவில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் மீள்குடியேற்றம் உடனடியாக சாத்தியமற்றதாயின் இரணைதீவில் தங்கிநின்று தொழில் செய்வதற்கு அனுமதிக்குமாறு இரணைதீவு மக்கள் கூட்டங்களில் வலியுறுத்தியிருந்தனர்.
ஆனால், இரணைதீவில் தொழில்புரியவோ மீள்குடியேறவோ கடற்படையினர் அனுமதிக்கவில்லை. இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இரணைதீவில் மக்கள் குடியேறவும் தொழில்புரியவும் தடையாக நிற்பவர்கள் யார்? கடந்த அரசு விட்ட தவறையும் நல்லாட்சி அரசும் விடுகின்றதா? இரணைதீவு தமிழ் மக்களின் பூர்வீக நிலம், கடற்றொழில் செய்யவும் மீள்குடியேறவும் இரணைதீவு மக்களுக்கு உரிமையுண்டு என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி இரணைதீவிற்கான பயணம் இடம்பெறவுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago